மெல்பேர்னில் மழலைக் கல்வி முதல் தமிழியல் (பிஏ) பட்டப்படிப்புவரை.

 28நமது தமிழ்க் கலாசாலையில் ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ் வகுப்புகள் நடைபெற்றுவருவது எல்லோரும் அறிந்ததே. இன்றுமுதல் (21 ஜூலை 2013)  ஞாயிற்றுக்கிழமையும் தமிழ் வகுப்புகள் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு நமது கலாசாலையின் கொடியையும் ஆஸ்திரேலிய தேசியக் கொடியையும் ஏற்றி வைத்து மாணவர்களை வரவேற்கும்  விழாவிற்கு வந்து சிறப்பித்த விருந்தினர்களுக்கும்  நாம் நன்றி கூறுகிறோம்.

மழலைக்கல்வி முதல் உயர்கல்வி வரை (Prep -G12) தமிழ் கற்ற பிறகு மேலும் தமிழ்க்கல்வியைத்தொடருவதற்கு வகையாகவும், ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்கள் தமது தமிழ் தாகத்தை தீர்ப்பதற்கு ஏதுவாகவும் இருக்கும் வகையில் தமிழில் மேலதிகக் கல்வியான

  • சான்றிதழ்க் கல்வி
  • உயர் சான்றிதழ்க் கல்வி
  • பட்டயக் கல்வி
  • பட்டக் கல்வி – தமிழியல் (B.A Tamilology) ஆகிய படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

விளக்கேற்றும் வைபவம்

திருமதி பிரியா பொன்னரசு, திருமதி புஷ்பா செந்தில்குமார், திருமதி சுமதி தவீசன், திருமதி மேனகா மோகனராஜா, திருமதி பாரதி மன்னார்சாமி, திருமதி விஜயலட்சுமி ராமச்சந்திரன், திருமதி தீபா மணீஸ்கந்தன், திருமதி அம்பிகா, திருமதி ரேகா சுப்பிரமணியன் ஆகியோர் விளக்கேற்றிவைத்து விழாவைத் துவக்கினார்கள்.

Teachers

பெற்றோர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் தலைமை ஆசிரியர் திரு பொன்னரசு சிங்காரம் வரவேற்றார். பாரதி கண்டத் தமிழை பிரியமுடன், ஆனந்தமாகக் கற்று, சுபமாக வாழவேண்டும் என்ற விதையை விதைப்பவர்கள் எங்கள் தமிழ்க்கலாசாலையின் ஆசிரியர்கள் என்றுகூறி, ஆசிரியர்கள் திருமதி பாரதி, திருமதி பிரியா, திரு ஆனந்த், திருமதி சுபா ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினர்கள்

2627

 

 

 

 

 

 

 

இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக விக்டோரியா மாநிலத்தின் பண்பாட்டுக் குழும ஆணையர் (மல்டி கல்சுரல் கமிஷ்னர்) திரு சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்க் கலாசாலையின் தமிழ் வகுப்புகளைத் திறந்து வைத்தார்.

விக்டோரிய இந்திய பெடரேஷன் அமைப்பின் தலைவர் திரு வாசன் சீனிவாசன் அவர்களும், தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் உள்ள முனா ஆஸ்திரேலிய உயர் கல்லூரியின் நிறுவனர் மருத்துவர் திரு அப்துல் ரஹ்மான் அவர்களும். மோனாஷ் பல்கலைக் கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகிய உளவியல் மருத்துவர் திரு மகாலிங்கம் அவரகளும், தலைமைக் கணக்கர் திரு முருகையா அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டார்கள்.

 கொடியேற்றமும் மாணவர் உறுதி மொழியும் 

FlagHoistதிரு சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் ஆஸ்திரேலிய தேசியக்கொடியை ஏற்றினார்கள். திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் கொடியை ஏற்றிவைத்தார்.

School Oath-2 Copyright1“என் பெற்றோரைப் பெரிதும் போற்றி வாழ்ந்திடுவேன். என் தாய் மொழியை மறக்கமாட்டேன். என் ஆசிரியரை மதித்து நடப்பேன். கல்விதான் உலகில் சிறந்தது. கல்விதான் என்னுடைய சக்தி. நான் கற்ற செம்மொழித் தமிழை மற்றவருக்குச் சொல்லிக் கொடுப்பேன். செம்மொழித் தமிழையும், தாய் நாட்டையும், இயற்கையையும் மதித்து நடப்பேன். குடும்பப்பற்று, நாட்டுப்பற்று, உண்மை, உழைப்பு, உதவி, நேர்மை இவைகளை கடைபிடிப்பேன் என்று நான் உறுதிகூறுகிறேன்”, என்று மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொaண்டார்கள்.

நம்முடைய மாணவர்களின் உறுதிமொழி மிக உயர்ந்த சிந்தனையாக்கம் என்று மருத்துவர் திரு அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார். மேலும் அந்த உறுதிமொழி எம்மதத்திற்கும், எந்த நாட்டிற்கும் பொதுவாகவும், உயர்ந்த நோக்கத்தையும் கொண்டு இருப்பதால் அதைத் தமிழகத்தில் உள்ளத் தன்னுடையக் கல்லூரியிலும் பயன்படுத்த விருப்பம் தெரிவித்தார். உறுதிமொழியின் ஒவ்வொரு வரியும் ரத்தினச்சுருக்கமாக, தெளிவாக, சிறந்த நோக்கத்தைக் கொண்டு இருப்பதால் இதை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் என்று திரு அப்துல் ரஹ்மான் அவர்கள் வலியுறுத்தினார்.

மொழியும், இனமும் இணைந்து வாழ வேண்டும்

17பல்லாண்டுகாலமாக வாழ்ந்து வருகின்ற செம்மொழிகளுள் ஒன்று தமிழ் மொழி. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய புகழ்வாய்ந்த இலக்கியங்களைக் கொண்டு விளங்கும் ஒரே இந்திய மொழி தமிழ் மொழி என்று திரு சிதம்பரம் சீனிவாசன் அவர்கள் கூறினார்கள். மிகத் தொன்மையானதும் இளமையானதும் இனிமையானதும் தமிழ் மொழி என்றுக் குறிப்பிட்டார். கடல் கடந்து வசிக்கும் நம் குழந்தைகளுக்கு வெறும் தமிழ்க் கல்வியுடன், பண்பாட்டுக் கலைகளையும் சொல்லித்தருவது மிக அவசியம் என்றார். இதுபோன்ற கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் மற்ற இன மக்களும் கலந்துகொள்ள வகைசெய்தால் மிகச் சிறப்பாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். மிகச் சிறப்பாக நடந்துவரும் நமது தமிழ்க் கலாசாலைக்கு விக்டோரிய மாநிலபண்பாட்டுக்குழுமம் (மல்டி கல்சுரல் கமிஷன்) தன்னுடைய முழு ஆதரவையும் தரும் என்று உறுதி கூறினார்.

குழந்தைகளின் நினைவுத்திறன்

குழந்தைகளுக்கு பல மொழிகளைப் பேசும் திறன் சிறுவயதில் மிக அதிகமாக இருக்கிறது. பத்துவயதுக்குள் நிறைfய மொழிகளைக் கற்றுக்கொள்வது அவர்களுடைய மொழித் திறமையைமட்டுமல்ல மற்றத் திறமைகளையும் வளர்க்க ஏதுவாகும் என்று மருத்துவர் திரு மகாலிங்கம் கூறினார். லத்தீன்மொழி அறிந்தவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொள்வது மிக எளிது. அது போல தமிழைக் கற்றுக் கொண்டால் எல்லா மொழிகளையும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளலாம். மேலும் உலகமெங்கும் பரவிவாழும் நம்முடைய இனம், தாய் மொழியை மறந்துவிடக்கூடாது என்பதையும் வலியுறுத்தினார்.

செல்வத்துள் சிறந்தது மழலைச் செல்வம்

‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்றMu1 முதுமொழிக்கு ஏற்ப, தமிழர்கள் எல்லா நாடுகளுக்கும் சென்று எத்தனையோ செல்வத்தைச் சேர்த்தாலும், அவர்களுடைய மிக முக்கியமானச் செல்வம் குழந்தைகள் தான். அந்தக் குழந்தைச் செல்வத்தைப் பாதுகாக்க, தாய் மொழி மிக அவசியம். பெற்றோருக்குப் பொருள் தேடுவதிலேயே நேரம் போய்விடுவதால் குழந்தைகளுக்குத் தமிழைச்சொல்லிக்கொடுக்க முடியாமல் போகிறது. ஆனால் இங்கு உருவாகி உள்ள தமிழ்க் கலாசாலை அந்தக் கவலையைப் போக்குகிறது. எனவே பெற்றோர்கள் இந்த வாய்ப்பை அவசியம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்று தலைமை கணகாளர் திரு முருகையா அவர்கள் கூறினார்கள்.

நன்கொடைd

உயர்ந்த நோக்கத்துடன் செயல்படும் இந்தக் கலாசாலைக்கு எல்லோரும் உதவவேண்டும் என்று விக்டோரிய இந்திய பெடரேஷன் அமைப்பின் தலைவர் திரு வாசன் சீனிவாசன் அவர்கள் குறிப்பிட்டார். அதற்கு தங்கள் அமைப்பு முன்னுதாரணமாக இருக்கும் என்று கூறி 501 வெள்ளிக்காசுகளை நன்கொடையாகத் தருவதாக அறிவித்தார்.

தமிழகத்தின் வாழ்த்துரை

greetதிறமையுடனும், விடாமுயற்சியுடனும் செயல்படும் தொடர்புமையங்களால்தான் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவ்வகையில் ஆஸ்திரேலியாவில் தமிழை வளர்த்துவர முன்வந்த ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலைக்கு நன்றி என்று தமிழகத்தில் உள்ள இணையத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இயக்குனர் முனைவர் ப. அர. நக்கீரன் அவர்கள் பாராட்டுரை அனுப்பி இருந்தார். மேலும் நம்முடைய தமிழ்க் கலாசாலையின் முயற்சியானது, ‘தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வழிகோலும்’ எனவும் இதற்கான எல்லா உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் திரு நக்கீரன் அவர்கள் உறுதியளித்தார். இந்த வாழ்த்துரையை திருமதி சாந்தி சிவக்குமார் அவர்கள் வாசித்தார்.

மாணவர்கள் கருத்து

2013JulyATA-Yadavan1மாணவர் யாதவன்: எல்லோருக்கும் வணக்கம் !தாய் மொழியைக் கற்றுக்கொள்வதால் நாங்கள் ஊருக்கு சென்றாலோ அல்லது தங்கள் பாட்டி தாத்தா உறவினர்களுடன் பேசுவதற்கு மிக வசதியாக இருக்கும். தாத்தா பாட்டி சொல்லும் கதைகளைக்கேட்பதற்கும் நன்றாக இருக்கும். நன்றி வணக்கம் !1Harshini

 

 

மாணவி ஹர்ஷினி: வணக்கம் ! தமிழ் படிப்பது முதலில் சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது மிக எளிமையாக இருக்கிறது எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் மிக உதவியாக இருக்கிறார்கள். தமிழ்ப் படிப்பதில் பெருமைப்படுகிறேன். நன்றி வணக்கம் !

2013JulyATA-Surithi1ஷ்ருதி: எங்கள் வீட்டில் தமிழில் பேசுவோம். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. எனக்கு எழுதப்படிக்க ஆசை. அதனால் நான் எழுதப் படிக்கக் கற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் !

 

2013JulyATA-Rhoshini1

ரோஷிணி: ஊருக்குச்சென்றால் தாத்தா, பாட்டியுடனும் மற்றவர்களுடனும் பேசுவதற்கு தமிழ் மிக அவசியம். அதனால் தமிழ் கற்றுக்கொள்கிறேன். நன்றி வணக்கம் !

2013JulyATA-Janani1ஜனனி (ஆங்கிலத்தில்): தமிழில் பேசவேண்டும் என்பது என்னுடைய ஆசை. தமிழ் வகுப்பு இங்கு இருக்கிறது என்பது எனக்கு மகிழ்வைத்தருகிறது. அடுத்தமுறை தமிழில் பேசுவேன். நன்றி வணக்கம் !

2013JulyATA-Shukritha1ஷுக்ரிதா: எல்லோருக்கும் வணக்கம் ! மூன்றுமாதங்களாக நான் தமிழ்க் கற்றுக்கொண்டேன். நான் தமிழில் பேச வேண்டும் என்று ஆசை. நான் பாடப்போகிறேன், ‘கைவீசம்மா கைவீசு கடைப்போகலாம் கைவீசு…..’ என் ஆசிரியை பாரதி அவர்களுக்கு நன்றி வணக்கம்.

1Rajuராஜூ: வணக்கம் .எனக்குத் தமிழ் பேசத்தெரியும் ஆனால் எழுதத் தெரியாது. எனக்கு எழுதவேண்டும் என்ற ஆசை அதனால் நான் தமிழைக்கற்க இங்கு வந்தேன். நன்றி வணக்கம்

2013JulyATA-Suraj1சூரஜ்: எல்லோருக்கும் வணக்கம் ! எனக்கு கொஞ்சம்தமிழ் எங்க அப்பா சொல்லிக்கொடுத்தாங்க. நான் இங்கு வந்து நிறைய தமிழ் எழுத்துக்களைக் கற்றுக் கொண்டேன். நன்றி வணக்கம் !

2013JulyATA-Hars-Nan1நந்திதாவும் ஹர்ஷினியும்: வணக்கம் ! ஒன்று இரண்டு என்ற எண்களைக்கொண்டபாடலைப் பாடப்போகிறோம். “ஒன்று யாவருக்கும் தலை ஒன்று, இரண்டு முகத்தில் கண் இரண்டு…” நன்றி வணக்கம் ! (முழுப்பாடலையும் பாடினார்கள். ஒருவர் சற்றுத் தடுமாறும்போது மற்றொருவர் வரிகளை எடுத்துக்கொடுத்து உதவி செய்யும் பாங்கு தமிழின்பால் மாணவிகள் கொண்டுள்ள ஈடுபாட்டைக்காட்டியது.)

2013JulyATA-Nirthika1நிருதிக்கா: வணக்கம் !நான் பாடப்போகிறேன். ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’ நன்றி வணக்கம் ! ( முழுப் பாடலையும் பாடினார்).

Rahini1திருமதி ராகினி அவர்கள், தன் குழந்தையை தமிழ் கற்க அனுப்பியது மட்டுமல்லாமல், தன்னையும் ஒரு மாணவியாக நம் கலாசாலையுடன் இணைத்துக் கொண்டார். தாயாருக்கே தமிழ் தெரியவில்லையென்றால் பிள்ளைக்கு எப்படி தமிழைச் சொல்லிக் கொடுப்பது? அதனால்தான் நானும் ஒரு மாணவியாக இங்கு பயிலுகின்றேன் என்றார். தன் தமிழறிவு நன்றாக  வேகமாக வளர்கிறது என்றுக் குறிப்பிட்ட திருமதி ராகினி அவர்கள், தான் இதே கலாசாலையில் தமிழியல் பட்டப்படிப்பும் படிக்கவேண்டும், தமிழில் முனைவர் (பிஹெச்டி) பட்டமும் பெற வேண்டும் என்ற தன் ஆவலைத் தெரிவித்தார்.

உழைப்பும் பாராட்டும்

திரு சாதிக் பாட்சா அவர்களும், திரு செந்தில்குமார் அவர்களும், திரு அர்னால்ட் அவர்களும் திருமதி விஜய லட்சுமி அவர்களும், திரு சங்கர சுப்பிரமணி அவர்களும் கலாசாலையின் தமிழ் கற்பிக்கும் முயற்சியை வெகுவாகப் பாராட்டிப்பேசினார்கள்.

திரு மணிஸ்கந்தன், திரு கிரி சித்துலகாரி, திரு பார்த்தசாரதி  திரு மாரிமுத்து ஆகியோர் புகைப்படங்கள் எடுத்து விழாவின் சிறப்பை நினைவில் நிறுத்தி, மற்றவர்களுக்குக் காட்ட உதவினார்கள்.

செல்வி புவனேஸ்வரி சுகுமாரன், திருமதி சசி சித்துலகாரி, திருமதி சாந்தி சிவக்குமார் ஆகியோர் விழாவைத் தொகுத்தளித்தார்கள். விழாவின் இறுதியில் எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்தச் சிற்றுண்டியை சுவைபட தயாரித்து அளித்தவர்கள் திருமதி சசி சித்துலகாரி, திருமதி சாந்தி சிவக்குமார், திருமதி கமலவள்ளி சுகுமாரன் ஆகியோர்.

விழாவிற்கு வருகை தந்திருந்த அனைத்து தமிழ் ஆர்வலர்களுக்கும், விழாவைச் சிறப்பாக வழிநடத்திச்செல்ல உதவிய திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மொழி ஆய்வு நிறுவனத்தின் சார்பாக நாங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மழலைக்கல்வி முதல் பட்டக்கல்விவரை

ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையில் தமிழ் வகுப்புகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. ஆஸ்திரேலிய விக்டோரிய அவசியக் கல்வித்திட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு பாடத்திட்டங்கள் அமைந்து இருப்பதால் மழலைக் கல்வி முதல் உயர்கல்வி வரை இங்கு பயில முடியும். நமது தமிழ்க் கலாசாலையின் சிறப்பான அம்சம் என்னவென்றால் இங்கு பண்பாட்டுக் கல்வி போதிக்கப்படுவதுதான். அயல் நாட்டில் வசிக்கும் குழந்தைகளின் சூழ்நிலைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பாடங்களை நாங்கள் சொல்லிக் கொடுக்கின்றோம். மரபு சார்த் தமிழ்க் கல்வி என்றப் புதியப் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு உலகத்திலேயே முதல் முறையாக கேரம் டவுன்ஸ் உயர்கல்லூரியில் மாணவர்களுக்கு சொல்லித்தருகின்றோம்.

பள்ளிப்படிப்பை முடித்தப் பிறகு?

உயர்கல்லூரியில் (செகண்டரி காலேஜ்) தமிழ்க் கற்றுத்தேர்ந்த மாணவர்கள் அதன் பிறகு, தன் தமிழ்க் கல்வியைத் தொடர முடியாமல் போகிற சூழ்நிலைதான் தற்போது இங்கு உள்ளது. தன் தமிழ்க்கல்வி அவ்வளவுதான் என்று மாணவர்கள் நினைக்கின்றார்கள். பெற்றோர்களுக்கும் அவ்வெண்ணமே மேலோங்கி நிற்பதைக் காண்கிறோம். மேலும் தமிழ் ஆர்வம் மிக்கப் பல பெற்றோர்கள் தங்கள் தமிழறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள ஆஸ்திரேலியாவில் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருப்பதைக்கண்டு விசனமுற்று இருப்பதையும் நாம் அறிவோம். இந்தச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இங்கு வசிக்கும் அனைவருக்கும் தமிழில் மேலதிகப்படிப்புகளைப் படிக்கத் தேவையான செயல்களைச் செய்ய நாங்கள் முன்வந்துள்ளோம்.

சான்றிதழ், பட்டயம், பட்டம் (தமிழியல்)

தமிழறிவை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நாம் சொல்ல விரும்புகின்றோம். இப்போது ஆஸ்திரேலியாவிலேயே தமிழ் படித்து இந்தியப் பட்டங்களைப் பெறலாம். இப்போது தமிழகத்தில் உள்ள தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் (TAMIL VIRTUAL ACADEMY) இணைந்து

  • சான்றிதழ்க் கல்வி
  • உயர் சான்றிதழ்க் கல்வி
  • பட்டயக் கல்வி
  • பட்டக் கல்வி

இவைகளை ஆஸ்திரேலியாவிலேயே கற்றுக்கொள்ள வகை செய்துள்ளோம். இந்த முறையால் பல்லாயிரம் வெள்ளிக்காசுகள் செலவு செய்து, பலநாட்கள் விடுமுறை எடுத்து, தமிழகம் சென்றுத் தேர்வு எழுதவேண்டிய நிலையை நீக்கிவிட்டோம். ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையிலேயே தேர்வுகளை எழுதிவிட்டு இந்தியப் பட்டங்களைப் பெற ஏற்பாடுகள் செய்துள்ளோம். அதுமட்டுமல்ல வீட்டில் இருந்தபடியே தாங்களே கற்றுக்கொள்ளும் வகையில் எளிய முறையில் பாடங்கள் வடிவமைக்கப்பட்டு இருப்பதால் நீண்டதூரம் பயணம் செய்வதையும், அதிக நேரம் செலவிடுவதையும் தவிர்த்துவிட்டோம். அதே நேரத்தில் மாணவர்களுக்குப் பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களைக் கேட்டறிந்துத் தெளிவாகக் கற்க வகுப்புகளும் நடக்க வகை செய்துள்ளோம். தமிழில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் நேரடிப் பார்வையில் மாணவர்கள் தெளிவு பெற முடியும்.

எங்கு, எப்படிப் பதிவுசெய்வது?

தமிழியலில் சான்றிதழ்க் கல்வி, உயர் சான்றிதழ்க் கல்வி, பட்டயக் கல்வி, பட்டக் கல்வி ஆகியவற்றைக் கற்றுத் தகுதிபெறத் தேவையான மேலதிகச் செய்திகளைப் பெற கீழ்க்கண்டவற்றில் தொடர்புகொள்ளலாம்.

Info@australiantamilacademy.org

www.tamilresearch.org

0434 013 993

 

Tags: ,