First time for Australian students - Tamil school books to meet Australian standards.

First time for Australian students – Tamil school books to meet Australian standards.

The Australian Tamil Academy is proud to announce the launch of Tamil School Books designed for Australian students (a first in Australia) that covers the key themes outlined by the Department of Education & Early Childhood Learning Victoria. These series of books are created for each Tamil year level and cover a range of themes including Tamil culture, Discipline, Passion for Mother Tongue, Family relationships, Patriotism, Truth, Hardwork,  Literature, Grammar, Art of Living, Multiculturalism and much more. We welcome everyone to join us in celebrating the 1st Year Anniversary of the opening of the Australian Tamil Academy and Tamil School Book launch!

ஆஸ்திரேலிய வாழ் தமிழர்களின் சரித்திரத்தில் முதல்முறையாக, தமிழ் பாட நூல் வெளியீடு.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்கெனத் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடநூல். இணையத்திலும், தாய் நாட்டிலும் எவ்வளவோ பாட நூல்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும் முறையாகக் கற்பதற்கு அயலகத்தில் வசிக்கும் நம்முடைய குழந்தைகளுக்கு நேரம் கிடைப்பதில்லை. அந்தப் பாடநூல்கள் முழு நேரத் தமிழ் வகுப்பிற்காக வடிவமைக்கப்பட்டவை. ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு வாரத்திற்கு இரண்டரை மணி நேரம் மட்டுமே தமிழ் வகுப்பு நடக்கிறது. அந்த இரண்டரை மணி நேரத்திற்குள் செம்மொழித் தமிழின் சாரமாகிய

  • தமிழரின் மரபு,
  • ஒழுக்கம்,
  • பல்லினப் பண்பாட்டு ஒற்றுமை,
  • தாய்மொழி பற்று,
  • குடும்பற்று,
  • நாட்டுப்பற்று,
  • உண்மை,
  • உழைப்பு,
  • நேர்மை,
  • இலக்கியங்கள்,
  • இலக்கணம்,

இவற்றையெல்லாம் முறையாகப் போதிக்கச் சரியானதொரு தமிழ் பாடப் புத்தகம் இதுவரை இல்லாதிருந்தது. அந்தக் குறை இப்பொழுது நீங்கிவிட்டது. நமக்கெனப் புதிய பாடப் புத்தகங்களை வடிவமைத்துள்ளோம்.

மரபு சார் தமிழ்க் கல்வித் திட்டத்தின் வழிமுறையில் முதல் முறையாக இரண்டு பாடப் புத்தகங்களை வெளியிடுகின்றோம்.

கண்கவர் வண்ணத்தில் கருத்துகளை ஒருங்கே கொண்டுள்ள இப்புத்தகம் இளம் மாணவர்களைக் கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்த வகையில் இன்னும் பல பாடப் புத்தகங்களை வெளியிட உள்ளோம்.

  • தகுதியுள்ள தமிழ் ஆசிரியர்கள்!
  • தனித்துவமான தமிழ் பாட நூல்கள்!
  • இனிய தமிழைப் போதிக்க எளிய பயிற்சி திட்டங்கள்!

உங்கள் புத்தகத் தேவைக்கு அணுகுங்கள்:

Info@australiantamilacademy.org

 

Tags: , , , , , , ,