அன்புடையீர் !

சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழா பற்றிய அறிவித்தல்.
டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி மாலை 4.15 மணி துவக்கம் இரவு 8.30 மணிவரை
தமிழரின் தலைசிறந்த இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தை முன்வைத்து “சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழா” ஒன்றைக் கொண்டாடுவதற்கு வள்ளுவர் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்தியாவிலிருந்து திரு தமிழருவி மணியன் அவர்கள், இந்தச் சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழாவில் கலந்துகொண்டு சொற்பொழிவாற்ற இருக்கிறார்கள்.

இந்த இலக்கியத் திருவிழாவில் மெல்பேர்னின் தலைசிறந்த நடனப் பள்ளி மாணவர்களும், ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாலையின் மாணவர்களும், பெற்றோர்களும் இணைந்து ‘சீதையின் சினம், பாஞ்சாலியின் மனம்‘ என்ற நாடகத்தை நடத்துகின்றனர். இராமனுடைய செயலும், கண்ணனுடைய தர்ம யுத்தமும் விவாதத்திற்கு வைக்கப்படுகின்றன. இந்த நாடகத்தில் பெற்றோர்கள்

3rd Tamil Literary Festival SILAPPATHIKARAM 2014இராமாயண, மகாபாரதக் கதாபாத்திரங்களாகத் தோன்றி, தங்கள் வாதத்தை முன் வைக்கின்றனர். இறுதியில் தமிழருவி மணியன் ஐயா அவர்கள் முழு விளக்கமும் தருகிறார்.மேலும் “இலக்கியக் காலம் தொட்டு இன்றுவரை பெண்மை” என்ற தலைப்பில் திரு தமிழருவி மணியன் அவர்கள் செந்தமிழ்ச் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

இந்தச் சிலப்பதிகாரம் இலக்கியத் திருவிழாவில் தேடுகிறேன் என்ற தலைப்பில் ஒரு கவியரங்கம் நடைபெற உள்ளது. பாடும்மீன், செந்தமிழ் செல்வர் திரு ஸ்ரீகந்தராசா அவர்கள் நடுவராக இருந்து கவியரங்கத்தை நடத்தவுள்ளார். திரு ஜெயராம சர்மாவும், திரு ஆவூரான் சந்திரன், திரு அரவிந்த், செல்வி பிரியங்கா பொன்ராசா, செல்வி காயத்ரி சண்முகசுந்தரம், திரு அஜந்தன் ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசிக்கவுள்ளார்கள்.

சிந்தனைக்கு விருந்தாக ‘திருக்குறள்’ என்ற தலைப்பில் திரு சங்கர சுப்பிரமணியன் அவர்கள் உரையாற்றவுள்ளார்.

 

Tags: ,