சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த மதுரையில் சொற்பொழிவும், நூல் அரங்கேற்றமும்!

ஆஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வி – கற்றலும் கற்பித்தலும்!

தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்கத்தில் நம் தமிழ்க்கலாசாலையின் நிறுவனர் நாகை கா. சுகுமாரன் சொற்பொழிவாற்றினார்!

21/06/2015ஆம் தேதி, தமிழ்நாட்டின் அரசு செயலர், கல்வித்துறை அதிகாரி முனைவர் திரு இராசாராம் அவர்களின் தலைமையில் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில், மதுரை மாவட்ட ஆட்சியாளர் திரு சுப்பிரமணியன் அவர்கள் முன்னிலையில் வள்ளுவர் அறக்கட்டளை மற்றும் ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாலையின் நிறுவனர் நாகை கா. சுகுமாரன் சொற்பொழிவாற்றினார்.

அஸ்திரேலியாவில் தமிழ்க்கல்வியைக் கற்றலிலும் கற்பித்தலிலும் இருக்கின்ற சுமைகளையும் சுகங்களையும், சுமைகளையும் பற்றிக் கூடியிருந்த அறிஞர்கள் மத்தியில் பொழிவாற்றப்பட்டது.

கலாசாலையின் நூலகத்திற்கு நூல்களைத் தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அங்கு வந்திருந்த எல்லாத் தமிழர்களும் ஆதரவுக்கரங்களை நீட்டி நாங்கள் புத்தகங்களை வழங்குகிறோம் என்று ஒருமித்த குரலில் கூறியது தமிழர்கள் தமிழால் தமிழுக்காக இணைவோம் என்பதை உறுதிப்படுத்தியது.

மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர் திரு பசும்பொன் ஐயா அவர்களின் சீரிய முயற்சியால் நடைபெற்ற இவ்விழாவில் ஹாங்காங் நாட்டின் தமிழ்ப்பண்பாட்டுக்கழகத்தின் தலைவர் திரு. திருப்பதி நாச்சியப்பன் (திருநாச்) அவர்களின் ‘ஹாங்காங்கில் தமிழ்’ என்ற உரையுடன் நூல் அறிமுகவிழாவும் நடைபெற்றது.

பொன்னுதவியும், பொருளுதவியும் சிலகாலம்தான் வாழவைக்கும். நூல்களைக் கொடுத்து அறிவுதானம் செய்வது தலைமுறையை வாழவைக்கும்!

 

DSC_1058  DSC_1246DSC_1055  DSC_1075 DSC_1104  DSC_1161 DSC_1214  DSC_1233The Indian-Express  22-06-2015தினமணி 001இந்து 001

 

Tags: , , ,