The Australian Tamil Academy is a not-for-profit community language school. It has been founded to create and provide opportunities for our children to enjoy, learn and become fluent in their mother tongue, Tamil.

Being bilingual in today’s society opens doors to many opportunities and has become a must for success. The Tamil society has one of the most vibrant, richest, and oldest cultural traditions in the world. The Tamil language and culture are inextricably intertwined and have evolved over a long period of time. Thus, learning our mother tongue offers insights into our culture, our identity and our history. It also offers perspectives on our ways of thinking and relating to the world. As any language and culture evolves over time, it is open to many influences from other cultures. The effects of these influences are particularly felt in migrant populations when our youngsters seek integration into society where new influences may rapidly outgrow any of the natural influences from their cultural background. This may not necessarily be a negative influence in some domains; however concerns arise when it comes to understanding their cultural identity, personal history and place in this world.

To be able to fully appreciate the world, it is important for our youngsters to understand and be fluent (speak, read and write) in their mother tongue, as well as being educated about their history and cultural identity.

Didactic lessons that have been conducted in the past is simply not enough – these lessons simply do not convey the intricacies and complexities of the our rich culture. The Australian Tamil Academy has filled that teaching void and has created a contemporary, interactive and intuitive curriculum that reflects the dynamics of the Tamil population and targets their needs in today’s world.

The Australian Tamil Academy is the first and only school to offer the Culture Based Tamil Education (CBTE) program.  It is important that the heritage and tradition of our Tamil culture, language and people is taught to our youngsters in a manner that is easy for them understand and appreciate. In the same manner, it is important for our teachers to be equipped to teach, hence we are the SRM University (Tamil Nadu, India) approved study centre offering Tamil Teacher Training program for Australian teachers – the first and only training program for Diaspora Tamil Teachers.

Our curriculum is accredited by the Department of Education and Early Childhood Development (DEECD) Victoria & Community Languages Schools program. The curriculum implements the guidelines and standards set out in the Australian Victorian Essential Learning Standards (AusVELS) for Languages Other Than English (LOTE).

 

நோக்கம்

தமிழ் மொழியையும் தமிழரின் பண்பாட்டையும் ஆஸ்திரேலியாவில் வளரும் பிள்ளைகள் முறையாகக் கற்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், கீழ்வரும் இலட்சியங்களைக் கொள்கைகளாகக் கொண்டுள்ளது

  • பாதுகாப்பான, பரிவான மற்றும் ஊக்கப்படுத்துகிற கற்கும் சூழ்நிலையை மாணவர்களுக்குத் தருதல்
  • சமூகத் தலைமையையும், கற்பனைத் திறத்தையும் ஊக்கப்படுத்தி, நல்லிணக்கத்தை வளர்த்தல்
  • அனைத்துத் தமிழர்களுக்கும் பயன்படக்கூடிய புதியத் தமிழ்ப் பாடத்திட்டத்தை வடிவமைத்தல்
  • மாணவர்களின் கற்றல் திறனை முறையாக மதிப்பிடக்கூடியத் தேர்வுமுறையை பின்னூட்டோடு உருவாக்குதல்

  

தொடங்கப்பட்ட காரணம்

நம் குழந்தைகள் நம்முடன் சரளமாகத் தமிழில் பேசி, நம் பண்பாட்டையும், தாய் மொழியின் சிறப்பையும் உணர்ந்து மகிழவேண்டும் என்ற ஆசை எல்லாப் பெற்றோர்களுக்கும் இருக்கிறது. பெற்றோர்களின் அந்த ஆசை நடைமுறையில் சாத்தியமாகவில்லை என்பது தான் உண்மை. அதனால் பெற்றோர்கள் மன உளைச்சல் அடைகிறார்கள் என்பதும், எதிர்காலத் தமிழ்ச் சமுதாயம் தன் அடையாளத்தை இழந்துவிடக்கூடும் என்பதும் கசப்பான உண்மை.  இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணவேண்டும்.

தமிழ்க் குழந்தைகள் அனைவரும் தமிழில் சரளமாகப் பேசிப் படித்து இன்புறவேண்டும் என்பது ஆஸ்திரேலிய தமிழ் ஆய்வு மையத்தின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியாக ஆஸ்திரேலிய  தமிழ்க் கலாசாலை (Australian Tamil Academy) என்ற கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டது. ஆய்வு மையத்தின் தமிழ் அறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும், பெற்றோர்களும், மாணவர்களும், ஒன்றுகூடி ஆய்வுசெய்து ஒரு புதியக் கல்வித் திட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.  அதுதான் மரபுசார் தமிழ்க் கல்வி.

கற்பிக்கும் முறை

ஆஸ்திரேலியாவில் வாழும் சூழ்நிலைக்குத் தகுந்தார்போல் குழந்தைகள் எளிதாகப் புரிந்துகொண்டு கற்கும் முறையிலும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் கொண்ட சூழ்நிலையை உருவாக்கி, கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு முறையானப் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. பேச்சுத்தமிழில் உரையாடுதல், கதைக் கேட்டல், பாட்டுப் பாடுதல், படம் வரைதல் போன்ற வலிமையான இனிமையான கற்கும் முறையையும் எங்கள் பள்ளியில் அமல்படுத்தியிருக்கிறோம்.